News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11510
வெள்ளி:
₹ 175

வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் சிறு வியாபாரிகளின் கடைகளை அகற்றுவதற்கு கடும் கண்டனம் :

20 Nov, 2026 — 01:26 PM
வ.உ.சி. மார்க்கெட் பகுதியில் சிறு வியாபாரிகளின் கடைகளை அகற்றுவதற்கு கடும் கண்டனம் :

தூத்துக்குடி மாநகராட்சி வ.உ.சி.மார்க்கெட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறு கடைகள் மற்றும் சிறு, குறு தொழில்கள் செய்து வரும் வியாபாரிகளின் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

  இதனால் அன்றாடம் வியாபாரம் செய்து தங்களது குடும்பத்தை நடத்தி வரும் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் கடைகளை அகற்றும் நடவடிக்கை அமைந்துள்ளதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.

இதுகுறித்து பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மாரியப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  மேலும், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வியாபாரிகளையும் ஒன்றுதிரட்டி, மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும்   சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே எங்களது முக்கிய நோக்கம்.

வியாபாரிகளின் உரிமைக்காகப் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

6

கருத்துக்கள்