முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 103 வது பிறந்தநாள் விழா, உடன்குடி மெயின் பஜாரில் கொண்டாடப்பட்டது.
வட்டார காங்.தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்து இந்திரா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் இனிப்பு வழங்கினார்.
காங்.மாவட்ட துணை தலைவர் துரைராஜ் ஜோசப், உடன்குடி பேரூர் மண்டல கமிட்டி தலைவர் ஹென்றி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, செயலாளர் தனிஸ், முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட செயலாளர் ஆதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிவலூர் முருகேசன், சுப்பிரமணி, மண்டல தலைவர்கள் பவுல், இருதயராஜ், முருகேசன், கலையரசி, மாவட்ட விவகாரக்குழு உறுப்பினர் பிரபாகர், இஸ்ரேல் ஜான், கோபால்,செல்ட்டன்,செந்தில்,தியாகராஜன், பிரான்சிஸ்,செல்வன், கீதன் உள்பட பாலர் கலந்து கொண்டனர்.
நகர தலைவர் சிவ செந்தில்குமார் நன்றி கூறினார்.
கருத்துக்கள்