பயணச்சீட்டு மேற்பார்வையாளர், இளநிலை கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.
6/2026 பணி: தலைமை வர்த்தகப் பணியாளர் – பயணச்சீட்டு மேற்பார்வையாளர்(Chief Commercial – Ticket Supervisor) காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.35,400 பணி: சரக்கு ரயில் மேலாளர்(Goods Train Manager) காலியிடங்கள்: 2750 சம்பளம்: மாதம் ரூ.29,200 பணி: இளநிலை கணக்கு உதவியாளர் – தட்டச்சுப் பணியாளர்(Junior Account Assistant – Typist) காலியிடங்கள்: 300 சம்பளம்: மாதம் ரூ.29,200 பணி: மூத்த எழுத்தர் – தட்டச்சர்(Senior Clerk – Typist) காலியிடங்கள்: 371 சம்பளம்: மாதம் ரூ.29,200 மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஆங்கிலம், ஹிந்தியில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான இறுதித் தேர்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.
கல்விச் சான்றிதழ்களில் (தற்காலிக அல்லது நிரந்தரச் சான்றிதழ்கள்) அவை வழங்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
ஒருவேளை, இந்தச் சான்றிதழ்கள் அறிவிக்கையின் கடைசித் தேதிக்குப் பிறகு வழங்கப்பட்டிருந்தால், இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியைக் கொண்ட ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் அல்லது ஒவ்வொரு பருவத்தேர்வு, ஆண்டுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியைக் கொண்ட தனித்தனி மதிப்பெண் பட்டியல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு சான்றிதழில் முடிவு அறிவிக்கப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை எனில், அந்தத் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியைக் குறிப்பிடும் சான்றிதழை, ஆவணச் சரிபார்ப்பின் போது அந்தந்த கல்வி நிறுவனம், பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான கல்வி தகுதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
1.1.2027 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்கள், மாற்றுத்திறனாளிகள் ( எஸ்சி, எஸ்டி) பிரிவினருக்கு 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் (ஓபிசி) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் வரையும் உச்ச வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கணிதம், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
இரண்டு கட்ட தேர்வுகளுக்கான பாடத்திட் டம், மதிப்பெண்கள் விபரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.
பொது, ஓபிசி, பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்களுக்கு ரூ.500.
தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி தரப்படும்.
இதர எஸ்சி,எஸ்டி, பெண்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ,250.
தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பி தரப்படும்.
தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
https://www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.11.2026 இரவு 11.59 மணி வரை.
கருத்துக்கள்