“ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்” என்று தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் கொடுத்த விளக்கம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
முன்னதாக நேற்று திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை அமைச்சர் ராஜீவ் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மழைக் காலங்களில் மட்டும் ஆற்றில் தண்ணீர் அதிகமாக போகும்போது அதிகளவில் நுரை பொங்குகிறது.
மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு நிறைந்த தண்ணீர் ஆற்றில் கலக்கும் போதும் நுரை ஏற்படுகிறது.
அதே வேளையில், மழையைப் பயன்படுத்திக் கொண்டு சாயப் பட்டறைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தவெக ஆட்சியில் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஆலை மூடல் போன்ற நடவடிக்கைகள் பாயும்” என்று பேசியிருந்தார்.
அவரது இந்த விளக்கம் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கருத்துக்கள்