News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11510
வெள்ளி:
₹ 175

அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

12 Oct, 2026 — 04:19 PM
அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, இந்தாண்டிற்கான மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் இ ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகிய இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் நோபல் பரிசு சுழற்சியில் அறிவிக்கப்படும் இறுதி மற்றும் மிக முக்கியமான விருது இதுவாகும்.

மேக்ரோ எகனாமிக் ஸ்திரத்தன்மைக்கான நுண் பொருளியல் அடித்தளங்களை உருவாக்கிதற்காக இவ்விருது இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், சீரற்ற நிலைகளையும் கட்டுப்படுத்தி ஸ்திரத்தன்மையை உருவாக்க நிதிக் கொள்கைகள் மற்றும் பணவியல் கொள்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான புதிய பொருளாதார மாதிரிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

3

கருத்துக்கள்