தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் குறுக்கு வட்டத்தில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் முதல்வர் முனைவர்.
இளங்குமரன் தலைமையில் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், வருவாய் ஆய்வாளர் பொன் முருகேக்ஷ் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு வகிக்கும் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளக்கவுரை ஆற்றிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு வகிக்கும் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களது விவரங்களை தாங்களே கைபேசி மூலம் பதிவு செய்யலாம் என்றும் இதில் தமிழ் உள்ளிட்ட 16 மொழிகளில் விவரங்களை பதிவு செய்ய முடியும் என்றும் அதில் வீட்டின் நிலை, குடிநீர், மின்சாரம், சமையல் எரிபொருள், வாகனம் மற்றும் தொலைபேசி உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்கும் விதத்தில் 33 அடிப்படை கேள்விகள் உள்ளன.
இக்கேள்விகள் முடித்து சமர்ப்பித்த பின் ஒரு பதினோரு இலக்க குறியீட்டு எண் (ID) கிடைக்கும்.
அதை பத்திரமாக வைத்துக் கொண்டு வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் கொடுத்து விபரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு இம்மாதம் ஜீலை 31ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் துல்லியமான தரவுகள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் அனைவருக்கும் சமமான நலத்திட்டங்கள் வழங்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
கருத்துக்கள்