நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி கல்லூரி நுழைவாயில் முன்பாக இன்று காலை 10:15 மணி முதல் 10:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார்.
இப்போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் தீவிர கோஷங்களை எழுப்பினர்.
கருத்துக்கள்