தூத்துக்குடியில் பொதுமக்கள் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் அமைப்பட்டுள்ள ஒரே சிக்னல் முறையைக் கைவிட்டு, தனித்தனி சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜூலை 30-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள 1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் வகையில் ஒரே சிக்னல் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இம்முறையைக் கைவிட்டு, இரண்டு கேட்களுக்கும் தனித்தனி சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை வைத்தும் ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து, வரும் ஜூலை 30-ஆம் தேதி காலை 10:30 மணியளவில் ரயில்வே நிர்வாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்