News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

திமுக - பாஜக இணைவதாகக் கூறுவது அவதூறு பரப்பும் செயல் : அமைச்சர் வன்னியரசு பேட்டி :

24 Jul, 2026 — 09:51 AM
திமுக - பாஜக இணைவதாகக் கூறுவது அவதூறு பரப்பும் செயல் :  அமைச்சர் வன்னியரசு பேட்டி :

திமுகவும் பாஜகவும் இணைவதாகக் கூறப்படும் கருத்துக்கள் முற்றிலும் அவதூறானவை என்றும், பாஜக எதிர்ப்பில் திமுக என்றென்றும் உறுதியாகவே இருக்கும் என்றும் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அமைச்சர் வன்னியரசு, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற முழு உறுதுணையாக இருப்போம்.

மேலும், 'நீட்' தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மையான கோரிக்கை.

இதற்காகப் பல போராட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம்.

வரும் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாகப் பிரதமர் கூறுவது வெறும் கண்துடைப்பு மற்றும் ஏமாற்று வேலையாகும்.

பாஜகவிற்கு எதிரான அனைத்துச் சக்திகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதை எங்கள் தலைவர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார்.

தற்போதும் பாஜக எதிர்ப்பு என்ற ஒரே புள்ளியில்தான் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

பாஜக எதிர்ப்பில் திமுக என்றென்றும் உறுதியாகவே இருக்கிறது.

திமுக - பாஜக இணையப்போவதாகக் கூறப்படுவது, திமுகவிற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறான கருத்தாகும்.

சிலருக்கு அத்தகைய விருப்பம் இருக்கலாம்; ஆனால், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இன்றைக்கும் திமுக 'இந்தியா' (INDIA) கூட்டணியுடன் இணைந்தே செயல்பட்டு வருகிறது.

பாஜக தேசத்திற்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.

இதில் திமுகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்." "காவல்துறை லாக்அப் மரணங்களுக்கு எதிராக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம்.

பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் துணையாக இருக்கும்.

மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

அவர் பேசியதை மக்கள் மன்றத்தின் முன் வைப்போம்; பொதுமக்கள் முடிவு செய்யட்டும்.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது நாகரிகமான அரசியல் கிடையாது." இவ்வாறு அமைச்சர் வன்னியரசு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

3

கருத்துக்கள்