News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

வெனிசுலா பூகம்பம்: உயிரிழப்பு 235 ஆக அதிகரிப்பு - தொடரும் மீட்புப் பணிகள் :

26 Jun, 2026 — 01:55 PM
வெனிசுலா பூகம்பம்: உயிரிழப்பு 235 ஆக அதிகரிப்பு - தொடரும் மீட்புப் பணிகள் :

வெனிசுலா நாட்​டில் நேற்று அடுத்​தடுத்து ஏற்​பட்ட சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​களில் 235 பேர் உயி​ரிழந்​தனர்.

4,000-க்​கும் மேற்பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

தென் ​அமெரிக்க கண்​டத்​தில் வெனிசுலா அமைந்​துள்​ளது.

அந்த நாட்​டின் யாராகுய் மாகாணம், சான்​பெலிப் நகரில் புதன்​கிழமை மாலை 6 மணி அளவில் ( இந்​திய நேரப்​படி வியாழக்​கிழமை அதிகாலை 3.35 மணி) சக்​தி​வாய்ந்த பூகம்​பம் ஏற்​பட்​டது.

இது ரிக்டர் அலகில் 7.2 ஆகப் பதி​வானது.

அடுத்த 40 விநாடிகளில் யுமரே நகரில் 2-வது மிகப்​பெரிய பூகம்​பம் ஏற்​பட்​டது.

இது ரிக்​டர் அலகில் 7.5 ஆகப் பதி​வானது.

முதல் பூகம்​பம் ஏற்​பட்ட சான் பெலிப் நகரில் இருந்து 16 கி.மீ.

தொலை​வில் யுமரே நகர் அமைந்துள்​ளது.

இந்த மிகப்​பெரிய பூகம்​பங்​களால் யாராகுய், லா குய்​ரா, கராபோபோ, மிராண்​டா, அரகு​வா, பால்​கான் மற்​றும் வெனிசுலா தலைநகர் கராகஸ் பகு​தி​கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

சான் பெலிப், யுமரே, மோரோன், தலைநகர் கராகஸ், சக்​காவோ, சான் பெர்​னார்​டினோ, அல்​ட​மி​ரா, லாஸ் பாலோஸ் கிராண்​டஸ், பருட்​டா, எல் பராய்​சோ, லா குய்​ரா, காட்டியா லா மார், மகுடோ, மைக்​கெட்​டியா உட்பட பல்​வேறு நகரங்​களில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், அரசு அலு​வல​கங்​கள், மருத்​து​வ​மனை​கள் தரை மட்​ட​மாகின.

இந்த பகு​தி​களில் அடுத்தடுத்து 30-க்​கும் மேற்​பட்ட நிலநடுக்​கங்​கள் ஏற்​பட்​டன.

இவை ரிக்டர் அலகில் 4.9 முதல் 6.3 வரை பதி​வாகின.

பூகம்​பம் குறித்து வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்​ரிக்ஸ் தலைநகர் கராகஸில் நிருபர்​களிடம் கூறிய​தாவது: வெனிசுலாவில் ஏற்​பட்ட சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​களால் இது​வரை 235 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

4,000-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து உள்​ளனர்.

பூகம்​பகத்​தால் ஏராள​மான கட்​டிடங்​கள் இடிந்து உள்​ளன.

இடி​பாடு​களில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி போர்க்​ கால அடிப்​படை​யில் நடை​பெறுகிறது.

உயி​ரிழப்பு மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சுகிறோம்.

வெனிசுலா முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​ பட்டு உள்ளது.

மீட்​பு, நிவாரண பணி​களில் அமெரிக்கா உதவி வருகிறது.

அந்த நாட்​டுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்கிறோம்.

இவ்​வாறு அதிபர் டெல்சி ரோட்​ரிக்ஸ் தெரிவித்தார்.

வெனிசுலா தலைநகர் கராகஸுக்கு அருகே 21 கி.மீ.

தொலை​வில் மைக்​கெட்​டியா சர்வதேச விமான நிலை​யம் செயல்​படு​கிறது.

அடுத்​தடுத்து ஏற்பட்ட பூகம்பங்களால் இந்த விமான நிலை​யம் கடுமை​யாக சேதமடைந்திருக்​கிறது.

இதன்​காரண​மாக விமான நிலை​யம் முழு​மை​யாக மூடப்​பட்டு உள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள அனைத்து சர்​வ​தேச விமான நிலை​யங்​களும் மூடப்​பட்டு உள்ளன.

பூகம்​பத்​தால் வெனிசுலா​வின் பெரும்​பாலான பகு​தி​களில் மின் விநி​யோகம் முழு​மை​யாக முடங்கி உள்​ளது.

குடிநீர், சமையல் காஸ் விநி​யோகம் நிறுத்​தப்​பட்டு உள்​ளது.

தொலைத்​ தொடர்பு சேவை முற்​றி​லு​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது.

கல்வி நிறு​வனங்​களுக்கு கால​வரை​யின்றி விடு​முறை அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

பூகம்​பத்​தில் உயிர் தப்​பிய​வர்​கள் புதன்​கிழமை இரவு முழு​வதும் சாலை, தெருக்​கள், மைதானங்​களில் தங்​கி​யிருந்​தனர்.

அவர்​களுக்கு தேவை​யான உணவு வகைகளை வெனிசுலா அரசும் தொண்டு அமைப்​பு​களும் வழங்கி வரு​கின்​றன.

இந்நிலையில், பூகம்​ப பாதிப்புக்கு உலக நாடு​கள் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்​டும் என்று ஐ.நா.

கோரிக்கை விடுத்துள்ளது.

4

கருத்துக்கள்