News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

‘அந்​தரன்’ வழக்​க​மான படமாக இருக்​காது: இயக்குநர் தகவல் :

04 Jun, 2026 — 01:32 PM
‘அந்​தரன்’ வழக்​க​மான படமாக இருக்​காது: இயக்குநர் தகவல் :

சந்​தோஷ் இராவணன் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம் ‘அந்​தரன்’.

பிரஜின், இவானா வருண், அதிரன், பத்​மன், அனுபமா குமார், மு.கி.​ சாம்​ப சிவம், ரமேஷ் பாபு உள்பட பலர் நடித்ததுள்ளனர்.

‘அட​வி’, ‘மனிதர்​கள்’ படங்​களைத் தொடர்ந்து ஸ்ரீ கிரிஷ் பிக்​சர்ஸ் சார்​பில் மு.கி.​சாம்​ப சிவம் தயாரிக்​கிறார்.

ஹரி எஸ்​.ஆர்.

இசையமைக்​கும் இப்​படத்​துக்கு கிஷோர் ராமச் ​சந்​திரன் ஒளிப்​பதிவு செய்​துள்​ளார்.

இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது.

படக்​குழு​வினருடன் தயாரிப்​பாளர் சி.​வி.கு​மார் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

படம் பற்றி சந்​தோஷ் இராவணன் கூறும்​போது, “இப்​படத்​தின் கதையைத் தயாரிப்​பாளர் சாம்​பசிவத்​துக்கு மின்​னஞ்​சல் மூலம் அனுப்​பினேன்.

2 நாட்​களில் ‘கதை நன்​றாக இருக்​கிறது.

ஆனால் இப்​போது என்​னால் தயாரிக்க இயலாது’ என்​றார்.

பிறகு ஆறு மாதம் கழித்து மீண்​டும் என்னை அழைத்​து, தனது நண்​பர் ராஜேந்திர பிர​சாத்​துக்கு கதை சொல்​லச் சொன்​னார்.

சொன்னேன்.

அவருக்​கும் பிடித்​திருந்​தது.

அவர் கொடுத்த ஆதரவின் காரண​மாகத்​தான் இப்​படத்​தின் பணி​கள் தொடங்கின.

‘அந்​தரன்’ என்​றால் ஒரு வேடன்.

மறைந்​திருந்து தாக்குபவன் என்று பொருள்.

இத்​துடன் நம்​முடைய தினசரி வாழ்​வில் பல விஷ​யங்​களைக் கடந்து செல்​கிறோம்.

அதன் மூல​மாக ஏதேனும் மோச​மான விளைவு​கள் ஏற்​பட்ட பிறகு ​தான் அதன் தீவிரத்​தைப் பார்க்கிறோம்.

அப்​படிப்​பட்ட ஒரு விஷ​யத்தை மைய​மாகக் கொண்​டது​ தான் இப்​படம்.

அதைப் பற்றி இப்​போது விரி​வாகச் சொல்ல இயலாது.

நீதி​மன்​றத்​தில் தற்​போது நடை​பெற்று வரும் ஒரு வழக்​கைத் தழு​வியது.

படம் வெளி​யான பிறகு இதைப்​ பற்​றிச் சொல்​கிறேன்.

இது வழக்​க​மான படமாக இருக்​காது” என்​றார்.

6

கருத்துக்கள்