News & Ad contact: 75025 54555
உலகம் முழுவதும் முடங்கியது ‘X’ தளம்.. லாக்-இன் செய்ய முடியாமல் பயனர்கள் தவிப்பு : எலான் மஸ்க் தரப்பில் மௌனம் :
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத் தளம், இன்று காலை உலக அளவில் மிகப்பெரிய சேவை முடக்கத்தைச் சந்தித்தது.
இதனால் பல மணி நேரம் பயனர்கள் தளத்தைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
சேவை தடங்கல்களைக் கண்காணிக்கும் ‘டௌன்டெக்டர்’ இணையதளத்தின்படி, இன்று காலை இந்திய நேரப்படி 8:20 மணி அளவில் இந்த முடக்கம் தொடங்கியது.
சுமார் 5,400-க்கும் மேற்பட்ட புகார்கள் குறுகிய காலத்திலேயே பதிவாகின.
இதில் 60% புகார்கள் மொபைல் செயலி தொடர்பாகவும், 25% புகார்கள் இணையதள அணுகல் தொடர்பாகவும் இருந்தன.
அமெரிக்காவின் நியூயார்க், சியாட்டில் மற்றும் இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் வசிக்கும் பயனர்கள் டைம்லைனைப் புதுப்பிக்க (Feed Refresh) முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
சிலருக்கு ‘லாக்-இன்’ செய்வதிலும் சிக்கல் நீடித்தது.
இந்தத் திடீர் முடக்கத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து எலான் மஸ்க் தரப்பிலிருந்தோ அல்லது ‘X’ நிறுவனத்திடமிருந்தோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இருப்பினும், நிறுவனத்தின் சர்வர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இது நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
X’ தளம் முடங்கியதை அடுத்து, பல பயனர்கள் தங்களின் அதிருப்தியை மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் மற்றும் முகநூல் தளங்களில் வெளிப்படுத்தினர்.
"எலான் மஸ்க் எதையாவது மாற்றப் போய் இப்படி ஆகிவிட்டதா?" எனப் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் ஸ்டார்லிங்க் சேவையிலும் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ‘X’ முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-