News & Ad contact: 75025 54555
கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் :
கண்டங்கத்திரி நீல நிற மலர்களையும் சிறிய கத்திரிக்காய் போன்ற காய்களையும் உடைய சிறிய செடியினம்.
இதன் இலை, பூ , காய், பழம், விதை, வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது.
கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி நெருப்பில் இட்டு ஆடாதொடை இலையில் வைத்து புகை பிடிக்க பல் கூச்சம், பல் வலி தீரும்.
கண்டங்கத்திரி இலைச்சாறு எடுத்து சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வாத நோய்களுக்கு பூசி வர குணமாகும், மேலும் தலைவலிக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.
தலைவலி வந்தால் மூன்று சொட்டு விட்டு நன்கு தேய்த்து வர தலைவலி குணமாகும்.
கண்டங்கத்திரி இலைச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு உடலில் தேய்த்து குளித்து வர வியர்வை நாற்றம் அகலும்.
பித்த வெடிப்பு இருந்தால், இதன் இலைச்சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி பித்த வெடிப்புக்கு பூசி வர விரைவில் மறையும்.
உடல் சூடு காரணமாக சிறுநீர்ப் பாதையில் நீர் கடுப்பு உண்டாகும்.
இதற்கு கண்டங்கத்திரி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டி சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட உடனே நீர்பாதையில் ஏற்படும் கடுப்பும் எரிச்சலும் தீரும்.
கண்டங்கத்திரி இலைச்சாறு, முடக்கத்தான் இலைச்சாறு, வாதநாராயணன் இலைச்சாறு ஒவ்வொன்றிலும் 100 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணையில் சேர்த்து காய்ச்சி இறக்கி பின்பு பச்சைக்கற்பூரம் தூள் – 50 கிராம் சேர்க்கவும்.
பிறகு, மூட்டு வலிக்கு இந்த எண்ணெய லேசாக சூடு செய்து மூட்டுகளில் தேய்த்து வெந்நீரில் ஒத்தடம் கொடுக்க மூட்டு வலி காணாமல் போகும்.
கண்டங்கத்திரி பூ 100 கிராம் எடுத்து காயவைத்து பிறகு திப்பிலி, சீரகம், நெல்லி முள்ளி ஆகியவற்றை தூள் செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வரவும்.
கண்டங்கத்திரி வேர், சித்தரத்தை, சுக்கு, சோம்பு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் அளவு எடுத்து, அதில் பால் விட்டு அரைத்து 1/4 லிட்டர் நல்லெண்ணையில் காய்ச்சி வைத்து கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வர தலைவலி, தும்மல், சைனஸ் ஆகியவை குணமாகும்.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-