News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் தாக்குதல்: கத்தார் எல்பிஜி ஆலை பற்றி எரிவதால் பதற்றம் :

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

கத்தாரில் எல்பிஜி ஆலை தீப்பற்றி எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் போர் நீடித்து வருகிறது.

கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நீடித்து வரும் போரில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நாசிர்ஜாதே, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது செவ்வாயன்று விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஈரானின் 3வது உயர்மட்ட அதிகாரியான உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டார்.

இந்த தொடர் இழப்புகள் ஈரானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

என்றாலும் ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது.

இதனிடையே ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மற்றும் அதன் கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின.

ஈரானில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் சமார் 80சதவீதம் இயற்கை எரிவாயுவில் இருந்து வருவதால் இந்த தாக்குதல் அந்த நாட்டின் மின் விநியோகத்திற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், கத்தார், துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது.

கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் ஏவிய ஏவுகணை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கத்தாரை சேர்ந்த அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ராஸ் லஃபான் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களில் ஒன்று என்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல், கடுமையான சேதத்தை விளைவித்துள்ளதாக கத்தார் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில், கத்தாரையும் அதன் அண்டை நாடுகளையும் ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவது கண்டிக்கத்தக்கது’ என கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கத்தாரில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களை வெளியேறுமாறு கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad