News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
எண்ணெய் கிடங்கு அருகே வெடித்த குண்டுகள்... துபாய் விமான நிலையம் மூடல் : சென்னைக்கே திருப்பி அனுப்பப்பட்ட விமானம் :

சென்னையிலிருந்து இன்று அதிகாலை இருநூறு பயணிகளுடன் துபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் அவசரமாகத் திருப்பப்பட்டு மீண்டும் சென்னைக்கே வந்து தரை இறங்கியது.

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கை இலக்காக வைத்து ஈரான் ராணுவம் இன்று அதிகாலை பயங்கரமான டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து துபாய் வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் சென்னை விமானம் துபாயில் தரை இறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்ப வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.

மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவி பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad