News & Ad contact: 75025 54555
ஐடிபிஐ (IDBI) வங்கியில் காலியாக உள்ள 1,300 அதிகாரி பணியிடங்கள் : மாதம் ரூ.60,000 வரை சம்பளம் :
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ (IDBI) வங்கியில் காலியாக உள்ள 1,300 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் (JAM - Grade O): 1,100 பணியிடங்கள், அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade A): 200 பணியிடங்கள் ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade A) பணிக்கு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பணிக்கு அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு).
சம்பளம்: ஆண்டுக்கு சுமார் ₹6.14 லட்சம் முதல் ₹6.50 லட்சம் வரை (மாதம் தோறும் சுமார் ₹40,000 முதல் ₹60,000 வரை பதவிக்கேற்ப மாறுபடும்).
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.03.2026
8
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-