News & Ad contact: 75025 54555
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 120 எக்சிக்யூட்டிவ் டிரெய்னீஸ் :
சீனியர் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி: (டெலிகாம் ஸ்ட்ரீம்): 95 இடங்கள்.
சம்பளம்: ரூ.24,900- ரூ.50,500.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/டெலிகம்யூனிகேசன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 30க்குள்.
சீனியர் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி: (நிதி): 25 இடங்கள்.
சம்பளம்: ரூ.24,900- ரூ.50,500.
வயது: 21 முதல் 30க்குள்.
தகுதி: சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வில் டெலிகாம் பிரிவுக்கு ஜெனரல் அப்டிடியூட் மற்றும் முக்கிய பொறியியல் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
நிதி பிரிவுக்கு ஜெனரல் அப்டிடியூட், சிஏ அல்லது சிஎம்ஏ பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2026.
6
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-