News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
165 பள்ளி மாணவிகள் ஏவுகணை தாக்குதலில் பலி : ஈரானில் பதற்றம் நீடிப்பு :

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுவது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத திட்டம், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் வர்த்தக கட்டுப்பாடு, ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பின்னணியாக கூறப்படுகின்றன.

இதனிடையே இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது.

இது ஐநா சாசனத்திற்கு எதிரானது என்றும் சர்வதேச சட்ட மீறல் என்றும் விமர்சித்துள்ளது.

இஸ்ரேல் தரப்பில் ‘ஐரன் டோம்’ பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாகவும், அதில் 165க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மனித உரிமை மீறல் என்ற சர்வதேச கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் எந்த நேரமும் பதிலடி தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad