News & Ad contact: 75025 54555
அசாம் துப்பாக்கி படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை :
பணி: ரைபிள்மேன்/ரைபிள்வுமன்.
மொத்த காலியிடங்கள்: 95.
விளையாட்டு பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்: (அதலெடிக்ஸ்-4, வில்வித்தை-6, பேட்மிண்டன்-4, பென்கக் சிலாட்-5, ரோவிங்-4, போலோ-6, குத்துச்சண்டை-5, கால்பந்து-4, ஜூடோ- 8, கராத்தே-12, துப்பாக்கி சுடுதல்-8, டேக்வாண்டோ-6, வுஷூ-9, பென்சிங்-5, சேபக் டாக்ரா-4, நாடு கடந்து ஓட்டம்-5.
வயது: 01.01.
2026 தேதியின்படி 18 முதல் 23க்குள்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பங்கு பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் விளையாட்டுத்திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
15.01.2024 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
உடற்தகுதி: 1.ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.
(எஸ்டி-162.5 செ.மீ) மேலும் சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீ அகலம், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., அகலம் இருக்க வேண்டும்.
2.
பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.
(எஸ்டி- 150 செ.மீ) 3.
எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களின் மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ., அகலம் இருக்க வேண்டும்.
5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100 மட்டும்.
இதை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள செலானை பயன்படுத்தி ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.assamrifles.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2026.
4
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-