News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11465
வெள்ளி:
₹ 175

புதூரில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் :

21 Nov, 2026 — 04:26 PM
புதூரில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் :

புதூரில் லயன்ஸ் கிளப் - லட்சுமி மிஷன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில், லயன்ஸ் கிளப் மற்றும் நாகலாபுரம் வின்னர்ஸ் லட்சுமி மிஷன் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சர்க்கரை அளவு, உப்புச்சத்து அளவு உள்ளிட்ட பொது மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொண்டனர்.

மேலும், முகாமிற்கு வந்த பொதுமக்களுக்குச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ஆரோக்கியம் தொடர்பான பொது மருத்துவ ஆலோசனைகளையும் லட்சுமி மிஷன் மருத்துவமனைக் குழுவினர் வழங்கினர்.

இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை லயன்ஸ் கிளப் ஜி.எல்.டி.

ஒருங்கிணைப்பாளர் கிருபா ராஜ்குமார், அழகர் மண்டல மாவட்டத் தலைவர் அழகர்சாமி, பார்த்திபன், புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், புதூர் லயன்ஸ் கிளப் தலைவர் வாசுதேவன், செயலாளர் பிராங்ளின் ராஜமணி, துணைத்தலைவர் சபரி கணேஷ், துணைச்செயலாளர் சதீஷ் செல்வகுமார், ஸ்ரீராம், விஜயகுமார், ஆல்டிரின் பாஸ்கரன் மற்றும் லட்சுமி மிஷன் மருத்துவமனை தலைமை மருத்துவர் கண்ணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

2

கருத்துக்கள்