News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11465
வெள்ளி:
₹ 175

வெற்றிலையின் பயன்கள்

05 Nov, 2026 — 04:05 PM
வெற்றிலையின் பயன்கள்

வெற்றிலை சாப்பிட வேண்டியதன் மகத்துவத்தை இங்கு பார்ப்போம்.

வெற்றிலை அனைத்து வலிகளுக்கும் நிவாரணி ஆகும்.

வெட்டுக்கள், சிராய்ப்புகள், வீக்கம் என அனைத்திற்கும் வெற்றிலையை பயன்படுத்தலாம்.

வெற்றிலையை அரைத்து பசையாக்கி காயங்களின் மேல் தடவலாம், உட்புற வலிகளுக்கு வெற்றிலையை மென்றோ அல்லது சாராகவோ குடிக்கலாம்.

இதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலை கெர்ட் (GERD) எனப்படும் இரைப்பையில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்துகிறது.

இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் சிறிதளவும் இல்லை.

மேலும் சமநிலையற்ற பிஹெச்(PH) ஆல் ஏற்படும் அமிலத்தன்மையை குறைக்கிறது.

இது பிஹெச்(PH) அளவை சீராக்குவதோடு இரைப்பையை சுத்திகரிப்பு செய்வதிலும் உதவுகிறது.

எனவே இரைப்பை வலி ஏற்பட்டால் உடனடியாக வெற்றிலையை சாப்பிடுங்கள்.

எடை குறைக்க விரும்புவர்கள் வெற்றிலையை சாப்பிட வேண்டாம் ஏனெனில் வெற்றிலை உங்களுக்கு அதிக பசியை ஏற்படுத்தும்.

உங்கள் உடலின் பிஹெச்(PH) அளவு குறைவதே பசியின்மைக்கு காரணமாகும்.

வெற்றிலை உங்கள் பிஹெச்(PH) அளவை சீராக்குவதால் பசியை தூண்டக்கூடிய ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது.

இது பசியை அதிகரிப்பதுடன் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

பற்களை வலுப்படுத்தும் வெற்றிலை வாய்வழி ஏற்படும் கிருமிகள் மற்றும் பாக்டீரிய தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.

வெற்றிலை மெல்வது உங்கள் வாயினை சுத்தப்படுத்தும்.

இது பல் சிதைவை தடுப்பதோடு ஈறுகளையும் பாதுகாக்கிறது.

தினமும் ஒருமுறை சூடான தண்ணீரில் வெற்றிலையை போட்டு வாய் கொப்பளிப்பது உங்கள் பற்களுக்கும், ஈறுகளுக்கும் பாதுகாப்பாகும்.

கவசமாய் அமையும் மேலும் பற்களில் ஏற்படும் இரத்தக்கசிவை கட்டுப்படுத்தும்.

உங்களுக்கு வாய்ப்புண் இருந்தால் வெற்றிலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் விரைவில் வாய்ப்புண் குணமாகும்.

இருமலை குணப்படுத்துவதற்கு வெற்றிலை ஒரு அற்புத மருந்தாகும்.

இதிலுள்ள ஆன்டிபையாட்டிகள் இருமலை கட்டுப்படுத்துவதோடு இருமலால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

வெற்றிலையை நீரில் கொதிக்கவைத்து அதில் கிராம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.

இந்த தண்ணீரை தினமும் இரண்டு முறை குடித்துவர இருமல் விரைவில் குணமாகும்.

இது இருமல் மற்றும் குளிரால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தக்கூடும்.

மேலும் நெஞ்சு சளி, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் வழங்குகிறது.

இது சுவாச பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தும், வெற்றிலையின் மிகசிறந்த பயன்களில் ஒன்று மூச்சுகுழல் அடைப்பை சரிசெய்வதாகும்.

இது மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் வீக்கத்தை குறைக்கிறது.

இதனை தினமும் சாப்பிட்டு வரமூச்சுக்குழல் செயல்பாடு சரிசெய்ய படுவதோடு நுரையீரல் வீக்கமும் குறையும்.

வெற்றிலையில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது.

வெற்றிலையை நசுக்கி அதன் சாறை பாலுடன் கலந்து குடித்துவர அது உடலின் நீரின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

மேலும் சிறுநீரக கோளாறுகள் இருந்தால் அதனையும் சரிசெய்யும்.

7

கருத்துக்கள்