News & Ad: 75025 54555
தங்கம்:
₹ 11465
வெள்ளி:
₹ 175

3 முறை தங்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை :

28 Oct, 2026 — 01:30 PM
3 முறை தங்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை :

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டி தொடரில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனுடைய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய வீரர், வீராங்கனைகள் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தமாக 114 பதக்கங்களை வென்று அசத்தினர்.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மூன்று முறை தங்கம் வென்ற இந்திய தடகள வீரரான நீரஜ் யாதவ் (42) கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார்.

இதனால், அவருக்குப் போட்டிகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டது.

இதனால், அய்ச்சி - நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

இந்த நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருந்த நீரஜ் யாதவ், தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் தகவலை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ்.

சத்யநாராயணா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடுமையான மன உளைச்சலில் இருந்ததாலேயே நீரஜ் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டாலும், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

6

கருத்துக்கள்