News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்' ஹீரோ... பிரபல ஹாலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்.. திரையுலகினர் நேரில் அஞ்சலி :

ஹாலிவுட் திரையுலகின் ஆக்சன் ஜாம்பவான், தற்காப்புக் கலை வித்தகர் சக் நோரிஸ் காலமானார்.

அவருக்கு வயது 86.

தற்காப்புக் கலைகளில் உலக சாம்பியனாகவும், ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத ஆக்சன் ஹீரோவாகவும் திகழ்ந்த சக் நோரிஸ், தனது 86-வது வயதில் காலமானார்.

அவரது மறைவு உலகெங்கிலும் உள்ள தற்காப்புக் கலை ஆர்வலர்கள் மற்றும் சினிமா ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது 1940-ல் பிறந்த சக் நோரிஸ், அமெரிக்க விமானப் படையில் பணியாற்றிய போது கொரியாவில் தற்காப்புக் கலைகளைக் கற்கத் தொடங்கினார்.

கராத்தே போட்டிகளில் தொடர்ந்து 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

அதன் பின்னர் 'சுன் குக் டோ' என்ற தனித்துவமான தற்காப்புக் கலை முறையை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

1972-ல் வெளியான ‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்’ திரைப்படத்தில், ரோமின் கொலோசியத்தில் புரூஸ் லீயுடன் இவர் மோதிய சண்டைக் காட்சி, உலகத் திரையுலகின் 'ஆல் டைம் பெஸ்ட்' சண்டைக் காட்சிகளில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது.

‘மிஸ்ஸிங் இன் ஆக்ஷன்’, ‘தி டெல்டா ஃபோர்ஸ்’ போன்ற படங்கள் மற்றும் 9 சீசன்கள் வெற்றிகரமாக ஓடிய ‘வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர்’ தொடர் இவரை உலகப்புகழ் பெறச் செய்தது.

சக் நோரிஸின் அசாத்தியமான வலிமையைக் கிண்டலாகவும் பெருமையாகவும் கொண்டாடும் 'சக் நோரிஸ் ஃபேக்ட்ஸ்' மீம்கள் உலகப் பிரபலம்.

"சக் நோரிஸ்க்கு வயதாவதில்லை, அவர் அடுத்த லெவலுக்கு முன்னேறுகிறார்" என்ற வாசகம் இவரது மரணச் செய்தியிலும் எதிரொலிக்கிறது.

சமீபத்தில் தனது 86-வது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, இன்ஸ்டாகிராமில் தான் பயிற்சி பெறும் வீடியோவைப் பகிர்ந்து, "எனக்கு வயதாகவில்லை, லெவல் அப் செய்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

அதுவே அவரது கடைசிப் பதிவாக அமைந்தது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad