News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
பிளஸ்-1 மாணவி கர்ப்பம் : 17 வயது சிறுவன் மீது போக்சோ :

தமிழகத்தில் பள்ளி செல்லும் வயதிலேயே மாணவி ஒருவர் கர்ப்பமான சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கிராப்பட்டி கிராமத்தில் 11ம்  வகுப்பு மாணவி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இத்தகவல் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது.

அந்தச் சிறுவன் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பழகியதும், அதன் விளைவாக மாணவி கர்ப்பமானதும் விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கும் வகையில், சம்பந்தப்பட்ட 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் என்பதால் சட்ட விதிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad