News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
தவெகவிலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம் :

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், இன்று (வியாழக்கிழமை) திராவிட முன்னேற்றக் கழகத்தில் முறைப்படி இணைந்துள்ளார்.

ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த இவர், அக்கட்சியிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அக்கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த ரஞ்சனா நாச்சியார், தற்போது தவெக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.

ஸ்டாலினை நேரில் சந்தித்த ரஞ்சனா நாச்சியார், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் முதன்மைச் செயலாளர் கே.என்.

நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கட்சித் தாவல் தொடர்பான தனது முடிவை முதலமைச்சரிடம் பகிர்ந்துகொண்ட அவர், இனி வரும் காலங்களில் திமுகவின் கொள்கை பரப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜகவில் இருந்தபோது மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே அங்கிருந்து விலகி விஜய்யின் கட்சியில் இணைந்ததாக ரஞ்சனா குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அங்கு நிலவிய சில உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான அதிருப்திகள் காரணமாகத் தவெக-வை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், ஒரு கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் மற்றொரு முன்னணி திராவிடக் கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad