News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
கொடைக்கானலில் பரவும் காட்டுத் தீ: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை :

கொடைக்கானலில் பரவும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வறண்ட சூழல் நிலவி வருகிறது.

இதனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் செடி, கொடி உள்ளிட்ட தாவரங்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

இந்த நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறையை அடுத்த புலியூர், பாரதி அண்ணா நகர், அஞ்சு வீடு உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலப் பகுதியில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது.

இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், ஒட்டியுள்ள வனப்பகுதியிலும் பரவும் அபாயம் உள்ளது.

பல ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவி கரும்புகை வெளியேறி வருகிறது.

எனவே, காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



7

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad