News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
தமிழகத்தில் 5 நாட்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு :

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி 3 அல்லது 5 நாட்களில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன..

இதுகுறித்து ஞானேஷ் குமார் தலைமையில் டெல்லி நகரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் தேதி மற்றும் அட்டவணை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தில் பல கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

வாக்குப்பதிவு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை மே மாத முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கும் நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது



6

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad