News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
மாதம் ரூ2500 /- மகளிர் உரிமைத் தொகை : விஜய் அதிரடி அறிவிப்பு :

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெண்களுக்கான பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்.

60 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும், மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மட்டும் இந்த திட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் தரமான பட்டு சேலை அண்ணன் சீராக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அத்துடன் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், குழந்தைகள் பள்ளியை விட்டு விலகுவதைத் தடுக்க தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை வழங்கப்படும் என்றும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பிற்காக தனி இலாகா உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



5

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad